பாஜக பெண் நிர்வாகி செல்போன் பறிமுதல்: ஒப்படைக்காத போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

பாஜக பெண் நிர்வாகி செல்போன் பறிமுதல்: ஒப்படைக்காத போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க  ஐகோர்ட் உத்தரவு

தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதா மணியிடம் விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை உரிய நேரத்தில் ஒப்படைக்காத காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு கோயில்கள் இடிக்கப்படுவது குறித்து ட்விட்டரில் பதிவிட்டது தொடர்பாக தமிழக பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சவுதா மணி மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார்,, விசாரணைக்காக அவரின் செல்போனை பறிமுதல் செய்தனர். தனது செல்போனை திரும்ப ஒப்படைக்க கோரி சவுதாமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்த போது, செல்போனை தடயவியல் சோதனைக்கு அனுப்பியிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சவுதா மணியிடம் செல்போன் எப்போது பறிமுதல் செய்யப்பட்டது, எப்போது விசாரணை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், கடந்த ஜூலை 9-ம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், 15-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, தடயவியல் துறையின் ஆய்வுக்காக செல்போன் அனுப்பப்பட்டுள்ளதால செல்போனைத் திரும்ப ஒப்படைக்க முடியாது எனவும், ஆய்வு முடிந்த பின் செல்போனை ஒப்படைக்க கோரி மீண்டும் கீழமை நீதிமன்றத்தை நாடலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை உடனடியாக விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காத காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிபதி, எடுத்த நடவடிக்கை தொடர்பாக அக்டோபர் 26-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in