பொதுமக்கள் முன்னிலையில் நடனம் ஆடிய சீமான்!

பொதுமக்கள் முன்னிலையில் நடனம் ஆடிய சீமான்!

சென்னையில் நடைபெற்ற சங்கத் தமிழிசை விழாவில் பொதுமக்கள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடனமாடினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் ‘தமிழோசை’ வழங்கும் சங்கத் தமிழிசை விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. ‘தமிழோசை’ இசைக்குழுவினரின் பல்வேறு இசை நிகழ்ச்சிகளையடுத்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வாழ்த்துரையாற்றினார்.

இந்த இசை நிகழ்ச்சியில், கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் கட்சியினர், கலைஞர்கள், இலக்கியவாதிகள், பண்பாட்டு ஆய்வறிஞர்கள், பொதுமக்கள் தங்கள் குடும்பத்தோடும் குழந்தைகளோடும் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

முன்னதாக நடந்த நிகழ்ச்சியில், சீமான் நடனமாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in