`ஆர்எஸ்எஸ் பேரணிக்கான தடையை நீதிமன்றத்திலும் உறுதிசெய்க'- தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்

`ஆர்எஸ்எஸ் பேரணிக்கான தடையை நீதிமன்றத்திலும் உறுதிசெய்க'- தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்

"ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான தடையை நீதிமன்றத்திலும் உறுதிசெய்ய, வலிமையான சட்டப்போராட்டம் செய்ய வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு 50 இடங்களில் பேரணி நடந்த உள்ளது. இந்த பேரணிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனை அதிமுக, பாஜக தவிர்த்து மற்ற கட்சிகள் வரவேற்றுள்ளன.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கின்றேன். சரியான நேரத்தில் மிகச்சரியாக முடிவெடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும்,காவல்துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகளும், நன்றியும்!

இதே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான தடையை நீதிமன்றத்திலும் உறுதிசெய்ய, வலிமையான சட்டப்போராட்டம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதோடு, இம்முடிவுக்கு ஆதரவாக தமிழக அரசுக்குத் துணைநிற்போமென உறுதியளிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in