`நான் கருணாநிதியின் மகன் என்கிறார் ஸ்டாலின்; அதனால்தான் சந்தேகமாக இருக்கிறது’- கொந்தளிக்கும் சீமான்!

`நான் கருணாநிதியின் மகன் என்கிறார் ஸ்டாலின்; அதனால்தான் சந்தேகமாக இருக்கிறது’- கொந்தளிக்கும் சீமான்!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் ‘மாயோன் பெருவிழா’ கொண்டாடப்பட்டது.

இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கிருஷ்ணனின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “பாதுகாப்பான சூழியல் மின் உற்பத்தி காற்றாலை, சூரிய ஒளி, கடல் அலை உள்ளிட்டவற்றில் இருக்கிறது. படகு செல்லும் வழி கடல் வழியை விட்டுவிட்டு மற்ற இடங்களில் மின் உற்பத்தி செய்யலாம். காற்றாலையும், சூரிய ஒளி மின் உற்பத்தியையும் தனியாருக்குக் கொடுத்தது யார்? மக்களுக்கு நஞ்சாக இருக்கும் அணுஉலைகளையும், அனல் மின்சாரத்தையும் கட்டிப்பிடித்து அழுவது யார்? 5,000 ஏக்கரில் 4,000 கோடி முதலீடு செய்தது அதானியா, அரசா?

தமிழ்நாட்டில் மின்சாரம் இருந்தால் அதை நம்முடைய அனுமதியில்லாமல் குஜராத்திற்குக் கொடுப்பேன் என மோடி சொல்கிறார். அதுபோல் கர்நாடகாவைக் கேட்காமல் காவிரி தண்ணீரைக் கொடுப்பாரா?அரிசி எனக்கு, உமி உனக்கு என்பது போல நாட்டை விற்று விட்டு கொடியை நமக்குக் கொடுக்கிறார்கள். அந்த கொடியும் காசுதான். கொடியை எப்படிப் பிடிக்க வேண்டும் எனத் தெரியாதவர்களெல்லாம் இன்று தேசப்பற்றைப் பற்றிப் பேசுகிறார்கள்.

சீமானுக்கு ஓட்டு போடாதீங்க மோடி உள்ளே வந்துவிடுவார் என ஸ்டாலின் சொன்னார். மோடி எங்க பக்கத்துல உட்காருகிறாரா, உங்க பக்கத்துல உட்காருகிறாரா? நான்தான் ஓடிப்போய் நன்றி, நன்றி எனச் சொல்கிறேனா? நான் காவடி தூக்கவா செல்கிறேன், ’நான் கருணாநிதி மகன்’ என்கிறார். அதனால்தான் சந்தேகமாக இருக்கிறது. பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எல்லாவற்றையும் தூக்கியவர்கள்தானே நீங்கள். கச்சத் தீவைத் தாரை வார்த்தது, கல்வியை பொதுப்பட்டியலில் சேர்த்தது என எல்லாவற்றையும் திமுகதானே செய்தது” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in