வீரலட்சுமி
வீரலட்சுமி

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் சூறையாடப்படும்... வீரலட்சுமி எச்சரிக்கை!

பட்டியலின மக்கள் குறித்து அவதூறு செய்யும் வகையில் பேசிய நாம்தமிழர் கட்சியின் நிர்வாகி மற்றும் சீமான் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் நாம் தமிழர் தலைமை அலுவலகம் சூறையாடப்படும் என தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரை சாதி ரீதியாக திட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்தில் வீரலட்சுமி தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, ‘’சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு சாதி ரீதியாக மக்களை பிளவுப்படுத்துவதே வாடிக்கையாக உள்ளது.

இன்னும் 15 நாட்களுக்கு பட்டியலின மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய நாம் தமிழர் நிர்வாகிகள் மற்றும் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் பட்டியலின மக்கள் ஒன்றிணைந்து வளசரவாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகம் சூறையாடப்படும். அந்த கலவரத்திற்கு சீமான் தான் பொறுப்பேற்க வேண்டும்’’ என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

வங்கிகளுக்கு பறந்த புதிய உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக உள்ளார்- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!

‘5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் என்பது மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதி ஆகாது’ -கார்கே திட்டவட்டம்!

யாரை ஏமாற்ற கூட்டம் நடத்துகிறீர்கள்?- ராமதாசுக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி!

33 வருடம்... என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது! அமிதாப்புடன் நடிக்கும் ரஜினி நெகிழ்ச்சி!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in