நடிகர் விஜய்யுடன் இணைந்து இயங்கத் தயார்! ஆனால்... சீமான் சொல்லும் புதுத் தகவல்!

நடிகர் விஜய்யுடன் இணைந்து இயங்கத் தயார்! ஆனால்... சீமான் சொல்லும் புதுத் தகவல்!

நடிகர் விஜய்யும், நானும் இணைந்தால் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் இணைந்து இயங்குகிறோம்  என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

"தமிழர்களின் வரலாற்றை ஆளுநர் ரவி திரித்து பேசுகிறார். விளம்பரத்திற்காக பேசும் ஆளுநர் ரவியை தவிர்க்க வேண்டும். தமிழக ஆளுநர் ரவி அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்பதால் அவர் விளம்பரத்திற்காக தினம் தினம் ஏதோ ஒரு கருத்தை கூறி வருகிறார். அவரை நாம் தவிர்க்க வேண்டும்.  பேசு பொருளாக இருக்க வேண்டும் என தினமும் அவர் அரசை விமர்சிக்கிறார். 

மகளிர் மசோதாவை பாஜக செயலாக்கம் செய்யாது. வெறும் பேச்சு தான்.  அக்கட்சியில்  33% ஒதுக்கீடு உள்ளதா? இது காதில் தேன் ஊற்றும் வேலை. நீட் தேர்விற்கு எதிராக திமுக கையெழுத்து பெறுவது என்பது ஏமாற்று வேலை. வெறும் நாடகம். நீட்டுக்கு எதிராக  கையெழுத்து வாங்கி முடிவதற்குள் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள்.  பிறகு யாரிடம் கொடுப்பது? எல்லாம் நாடகம்தான். தேர்தலுக்கான,  கட்சிக்கான அரசியலைத்தான் திமுக நடத்துகிறது.   மக்களுக்கான அரசியல் இல்லை. 

இந்தியா தேசமே இல்லை. பல தேசங்களின் ஒன்றியம்தான்.  ஐரோப்பிய யூனியன் போல, இந்திய யூனியன்தானே?  ஒரே நாடு என்றால் நமக்கு தண்ணீர் தரவேண்டுமே, ஏன் தண்ணீர் தரவில்லை. அப்புறம் எப்படி ஒரே நாடு? மத்திய, மாநில அரசு இரண்டுமே மக்களுக்கான அரசு இல்லை.

சீமான்
சீமான்

சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசுதான் எடுக்க வேண்டும். முதல்வர் எதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார் என்பது தெரியவில்லை. எந்த காலத்திலும் தேசிய, திராவிட கட்சிகளுடன் கூட்டணி என்பது கிடையவே கிடையாது.

நடிகர் விஜய், நாங்கள் இரண்டு பேரும் இணைந்தால் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் இணைந்து இயங்குகிறோம். அவர் வர வேண்டும், கட்சி ஆரம்பிக்க வேண்டும், அவரது கொள்கைகளை சொல்ல வேண்டும். அவர் கட்சி ஆரம்பிக்கும்போது அவரிடம் நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவீர்களா? என அவரிடம் கேளுங்கள்.

தங்களின் வலிமையைக் காண்பிக்கவே பா.ஜ.க அமலாக்கத்துறை ரெய்டும், திமுக பா.ஜ.கவினரை கைது செய்வதும் நடைபெறுகிறது. வருகின்ற தேர்தலுக்காகத்தான்  இந்த ரெய்டு கைதெல்லாம் நடைபெறுகிறது. புதுச்சேரியில் அரசுக்கு கிரண்பேடி ஏராளமான தொல்லைகளை கொடுத்தார்.  ஆனால் சகோதரி தமிழிசை நாகரிகமானவர். அப்படி செய்யவில்லை" என்று கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...


அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!

உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்

ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in