மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணுவுடன் சீமான் திடீர் சந்திப்பு!

நல்லகண்ணுவுடன் சீமான் திடீர் சந்திப்பு
நல்லகண்ணுவுடன் சீமான் திடீர் சந்திப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தமிழ் சினிமாவில் இயக்குநராக இருந்த காலத்தில், சீமான் பொதுவுடமை கட்சிகள் மற்றும் பெரியாரிய அமைப்புகளின் மேடைகளில் பங்கேற்று உரையாற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார். பெரியாரின் பேரன், மார்க்ஸின் மாணவன் என்று அவர் பேசத் துவங்கிய காலம் உண்டு. இந்நிலையில் 2009ம் ஆண்டிற்கு பிறகு நாம் தமிழர் கட்சியை தோற்றுவித்த பின்னர் பெரியாரிய மற்றும் இடதுசாரி சித்தாந்தங்களுக்கு எதிராக பேசியும் பயணித்தும் வருவதால் இந்த இரு அமைப்புகளில் இருந்தும் அவருக்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது.

நல்லகண்ணுவுடன் சீமான் திடீர் சந்திப்பு
நல்லகண்ணுவுடன் சீமான் திடீர் சந்திப்பு

இந்த நிலையில் சென்னை நந்தனத்தில் வசித்து வரும் மூத்த இடதுசாரி தலைவரான நல்லகண்ணுவை இன்று சீமான் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தனது பிறந்த நாளை சில நாட்களுக்கு முன்பு சீமான் கொண்டாடிய போது, பல்வேறு அரசியல் கட்சியினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். அப்போது வாழ்த்து தெரிவிக்க முடியாத நிலையில் நேற்று தொலைபேசியில் அழைத்து நல்லகண்ணு நலம் விசாரித்ததாக சீமான் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரை நேரில் சந்தித்து அவரது உடல் நலனை மரியாதையை நிமித்தமாக விசாரித்ததாக சீமான் தெரிவித்துள்ளார்.

நல்லகண்ணுவுடன் சீமான் திடீர் சந்திப்பு
நல்லகண்ணுவுடன் சீமான் திடீர் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். கஞ்சா போதைப்பொருட்கள் குறித்த கேள்வி எழுப்பிய போது, “நல்லகண்ணு ஐயாவுக்கு ஒரு அரசியல் நிலைப்பாடு உள்ளது. அவருக்கு இடையூறு ஏற்படக்கூடாது. வேறு போராட்டத்திற்கு செல்கிறேன். அங்கு கேளுங்கள்” என முடித்துக்கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in