வடமாநிலத்தவருக்கு எதிராக வெறுப்பு பேச்சு: சீமான் மீது வழக்கு பாய்ந்தது!

சீமான்
சீமான்

வடமாநிலத் தொழிலாளருக்கு எதிராக, அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வடமாநிலத் தொழிலாளர்களால் தமிழ்நாட்டில் உள்ளூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தனர். இதற்கிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில், வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் சீமான பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஹோலி பண்டிகை முன்னிட்டு அதிகளவில் தமிழகத்திலிருந்து வெளியேறினார்கள். வடமாநிலத்தவருக்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாக இந்த எண்ணிக்கை அதிகரித்திருந்தது. மேலும், வடமாநிலத்தவர் தாக்கப்பட்டதாகவும், கொல்லப்பட்டதாகவும் திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டன.

இவற்றுக்கு எதிராக பீகார் மற்றும் தமிழகத்தில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. தேர்தல் உத்தி வகுப்பாளரும், பீகாரை மையமாகக் கொண்டு அரசியலில் குதித்திருப்பவருமான, பிரசாந்த் கிஷோர், சீமானுக்கு எதிராக ட்விட்டரில் குற்றச்சாட்டு வெளியிட்டிருந்தார். ’வதந்தி வீடியோக்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று வடமாநிலத்தவருக்கு எதிராக அவதூறு பேசிய சீமான் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என கேள்வி எழுப்பியிருந்தார். இதனை பலரும் பகிர்ந்ததில் தேசிய அளவில் அவரது பதிவு கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், ஈரோடு கருக்கல்பாளையம் காவல்நிலையத்தில், வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் அவதூறு பேசியதாக சீமானுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in