மருத்துவமனையில் சேடப்பட்டி முத்தையா: முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரிப்பு

மருத்துவமனையில் சேடப்பட்டி முத்தையா: முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரிப்பு

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

நெல்லையில் அரசு நிகழ்ச்சிகளில் நேற்று பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். இதன் பின்னர் இன்று மதுரை வந்தார். இதனிடையே, உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவை நேரில் சென்று சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

மேலும், சேடப்பட்டி முத்தையாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். இதன் பின்னர் அங்கிருந்து முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in