உங்கள் பெயரில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளதா? 49 பி படிவம் பயன்படுத்துங்க... ‘சர்கார்’ விஜய் காட்டிய வழி!

‘சர்கார்’ விஜய்
‘சர்கார்’ விஜய்

நமது வாக்கை கள்ள ஓட்டாக எவரும் செலுத்தியிருப்பின், சட்டப்படி பிரத்யேகமாக வாக்களிக்க வழி இருக்கிறது. ஆனால் அதனால் நடைமுறையில் என்ன பயன் என்பதுதான் கேள்விக்குறியாக தொடர்கிறது.

விஜய் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2018-ல் வெளியான சர்கார் திரைப்படம், இந்த கள்ள ஓட்டு விவகாரத்தை புனைவில் தோய்த்து திரைக்கதையாக்கி இருந்தது. தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் விஜய் ஓட்டை, எவரோ கள்ள வாக்காக பதிவு செய்திருப்பார்கள். இதனால் கொதித்துப்போகும் விஜய் எடுக்கும் அதகளமே மிச்சத் திரைப்படம்.

சர்கார் விஜய்
சர்கார் விஜய்

’49 பி’ என்ற சிறப்பு பிரிவின் கீழ் தனது வாக்கினை விஜய் பதிவு செய்வது, சர்கார் திரைப்படத்தின் மூலமாக பொதுமக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. விழுப்புணர்வுக்காக தேர்தல் ஆணையம் கூட அதனை பயன்படுத்தி விளம்பரம் செய்தது.

ஆனால் நடைமுறையில் 49 பி என்பதால் ஏதேனும் பயன் உண்டா என்பது பெரும் விவாதத்துக்குரியது. வாக்குச்சாவடிக்கு செல்லும் ஒரு வாக்காளர், தனது வாக்கினை எவரேனும் கள்ள ஓட்டாக செலுத்தியிருப்பின் 49 பி உதவியை நாடலாம். தேர்தல் ஆணையம் கோரும் ஆவணத்தை சமர்பித்து தேர்தல் அதிகாரியிடம் 49 பி படிவத்தின் மூலம் வாக்குப்பதிவை கோரலாம்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரந்தில் இருக்கும் வேட்பாளர் பட்டியல் அப்படியே அந்த வாக்குச்சீட்டு படிவத்தில் இடம்பெற்றிருக்கும். அதில் முத்திரையிடுவதன் மூலம் வாக்காளர் சமர்ப்பிக்கும் வாக்குச்சீட்டினை தேர்தல் அதிகாரி சீலிட்டு பத்திரப்படுத்துவார். ஆனால் நிஜமான வாக்காளர் செலுத்திய இந்த ஓட்டு, வாக்கு எண்ணிக்கையில் இடம்பெறாது; கள்ளஓட்டுதான் எண்ணிக்கையில் சேரும் என்கிறார்கள் விவரமறிந்தோர்.

தேர்தல் வாக்குப்பதிவு
தேர்தல் வாக்குப்பதிவு

தனது வாக்குரிமையை இழந்துவிட்டதாக வருந்தும் வாக்காளர், தான் வாக்களித்துவிட்டதாக இதன் மூலம் திருப்தி கொள்ளலாம். அவ்வளவே! இவற்றுக்கு அப்பால், ஒருவேளை வேட்பாளர்களின் வெற்றி முடிவைத் தீர்மானிப்பதில் சிக்கல் எழுமெனில், இவ்வாறு சேகரிக்கப்பட்ட ’வாக்குகள்’ கணக்கில் எடுத்துக்கொள்ளப்படலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது. 49 பி விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகம் சேரவில்லை என்பதால், இதன் மூலம் வாக்கு பதிவாகும் போக்கும் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளது.

ஆனபோதும், ஒரு வாக்குச்சாவடி அல்லது தொகுதியில் 49 பி மூலம் பதிவாகும் ’வாக்குகள்’ கணிசமாக உயர்ந்து காணப்படும் எனில், அங்கே கள்ள ஓட்டு அதிகம் பதிவாகி இருப்பது உறுதியாகும். எனவே, அங்கே மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் அதிகாரி உத்தரவிடவும் செய்யலாம். அல்லது பாதிக்கப்பட்டதாக கருதும் வேட்பாளர் இதற்கான கோரிக்கையை விடுக்கலாம்; வேட்பாளரோ, வாக்காளரோ சர்கார் படம் போல நீதிமன்ற உதவியையும் நாடலாம்.

இத்தனை வம்புகளுக்கு வாய்ப்பளிக்கும் கள்ள வாக்குகளை தவிர்க்க விரும்புவோர், காலையிலேயே முந்திக்கொண்டு வாக்குச்சாவடிக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்துவிடுவது உத்தமம்.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in