மார்க்சிஸ்ட் மாநில செயலாளராக பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு!

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு மதுரையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இன்று மாலை புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில செயற்குழு உறுப்பினர்களாக உ.வாசுகி, பி.சம்பத், ப.செல்வசிங், எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், எஸ்.நூர்முகமது, பெ.சண்முகம், என்.குணசேகரன், கனகராஜ், மதுக்கூர் இராமலிங்கம், சு.வெங்கடேசன், கே.பாலபாரதி, சுகுமாறன், கே.சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் 79 பேர் கொண்ட மாநிலக்குழு மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in