
சென்னையில் போராட்டக் களத்தில் இருந்தபோது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு அவர் செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். 10 நிமிடம் பேசாமல் இருந்த சீமான் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக, அங்கிருந்த கட்சியினர் அவர் மீது தண்ணீரை ஊற்றியதோடு, முதலுதவி அளித்தனர். இதையடுத்து, சீமான் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திடீரென சீமான் மயங்கி விழுந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.