சீர்காழியில் நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சீர்காழியில் நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சீர்காழியில் நாளை, பள்ளி கல்லூரிகள் திறக்க வாய்ப்பு இல்லை என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம் இரண்டு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத அளவில் பெய்துள்ளது. இதனால் நேற்று காலையிலிருந்தே பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கிய காரணத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மெய்யநாதன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறார்கள். இன்று இரவுக்குள் மின்சாரம் கிடைக்கும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், “மழை நீர் வீட்டில் புகுந்ததால் சில மாணவர்களின் சான்றிதழ்கள், பாடப் புத்தகங்கள் நனைந்துவிட்டது. இது தொடர்பாகக் கல்வி அமைச்சரிடமும், தொடர்புடைய அதிகாரிகளிடமும் பேசியுள்ளோம். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசித்திருக்கிறோம். அவர்களுக்குப் புதிதாகப் புத்தகங்கள் வழங்கக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்போது இருக்கும் சூழலில் சீர்காழி பகுதிகளில் பள்ளி கல்லூரிகள் நாளை திறக்க வாய்ப்பு இல்லை. அதையும் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க உள்ளோம் ” எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in