டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை ஏற்க மறுத்தது உச்சநீதிமன்றம்

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியாடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை ஏற்க மறுத்தது உச்சநீதிமன்றம்

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், “இந்த விவகாரத்தில் தலையிட முடியாது” என்று கூறியது. மேலும், மணீஷ் சிசோடியா டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

டெல்லி மதுக்கொள்கை வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உயர்நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று கூறியுள்ளது.

சிசோடியாவின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, சிபிஐ குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் இல்லாததால் அவரை கைது செய்தது சட்டவிரோதமானது என்றும், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்ற சிபிஐயின் குற்றச்சாட்டு பலவீனமான சாக்கு என்றும் கூறினார்.

இதற்கு, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், " நீங்கள் உயர்நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள். எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன, ஆனால் இந்த நிலையில் இவ்வழக்கை விசாரிக்க நாங்கள் தயாராக இல்லை. இது மிகவும் மோசமான முன்னுதாரணமாக இருக்கும். நீங்கள் டெல்லியில் இருப்பதால் இதைச் செய்ய முடியாது" என்று குறிப்பிட்டார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in