`அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதிக்க முடியாது'- ராஜேந்திர பாலாஜிக்கு தடை போட்டது உச்ச நீதிமன்றம்

`அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதிக்க முடியாது'- ராஜேந்திர பாலாஜிக்கு தடை போட்டது உச்ச நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க தனக்கு 5 நாட்கள் இடை கால அவகாசம் வேண்டி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவினில் பணி வழங்குவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவானார். தொடர்ந்து, 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தவரை தமிழக தனிப்படை காவல்துறையினர் கர்நாடகாவில் கைது செய்தனர்.

இந்நிலையில், வழக்கு விசாரணை நடைபெறும் காவல் எல்லைக்கு வெளியே செல்லக்கூடாது, தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி உச்ச நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், ஜூன் 22-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ள அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்தார்.

அதில், 'அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளராக உள்ள தனக்கு சென்னையில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 5 நாட்கள் தனக்கு அனுமதி வழங்க வேண்டும்' என ராஜேந்திர பாலாஜி கோரிக்கை வைத்திருந்தார். மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் ராஜேந்திரபாலாஜி தரப்பில் முறையிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கினை தள்ளுபடி செய்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தால் மட்டுமே அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்ற என்ற நிலையில், தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் ராஜேந்திர பாலாஜி கூட்டத்தில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in