பாஜக ஐடி விங்க் தலைவராக சவுக்கு சங்கர் நியமனம்; அண்ணாமலை பெயரில் போலி அறிக்கை: கொந்தளிக்கும் நிர்வாகிகள்

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் பாஜக ஐடி விங்க் தலைவராக சவுக்கு சங்கர் நியமனம்; அண்ணாமலை பெயரில் போலி அறிக்கை: கொந்தளிக்கும் நிர்வாகிகள்

பாஜக ஐடி விங்க் தலைவராக யூடியூபர் சவுக்கு சங்கர், மாநில செயலாளராக பிரதீப் நியமனம் என்று அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே, பாஜக போன்று பொய்யான அறிக்கையை தயார் செய்து பரப்பிய நபர்கள் மீது புகார் அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது.

தமிழக பாஜக ஐடி விங்க் தலைவராக அரசியல் விமர்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் மற்றும் ஐடி விங் மாநிலச் செயலாளராக பிரதீப் ஆகியோர் நியமிக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டது போன்ற அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த அறிக்கையில் கடந்த சில நாட்களாக தமிழக பாஜகவில் நிகழும் மாற்றங்கள் மனவேதனையை அளித்து வருவதாகவும் ஏதோ ஒரு கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தன்னை பாஜக தான் இந்த நாற்காலியில் உட்கார வைத்திருக்கிறது.

எனக்கு கட்சியின் கொள்கைகளோ கோட்பாடுகளோ பற்றி தெரியாது. அதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. எனது தலைமையை வெறுத்து கட்சியில் இருந்து வெளியேற விரும்பும் நபர்கள் தாராளமாக வெளியேறலாம். பதவியில் இருந்து வெளியேறிய நபர்களின் இடத்திற்கு புதிய பொறுப்பாளர்களான பாஜக ஐடி விங்க் தலைவராக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மற்றும் ஐடி விங் மாநில செயலாளர் வாய்ஸ் ஆப் சவுக்கு பிரதீப் ஆகியோர் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த அறிக்கை முற்றிலும் போலியானது என்றும், திட்டமிட்டே சில விஷமிகள் போலி அறிக்கையை பரப்பிவருவதாக தெரிவித்துள்ள பாஜகவினர், இவ்வாறு போலியான கடிதத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரி பாஜக சார்பில் புகார் அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in