சவுக்கு சங்கர், குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு குறித்த கேள்விகளுக்கு சீமான் அதிரடி பதில்!

சவுக்கு சங்கர், குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு குறித்த கேள்விகளுக்கு சீமான் அதிரடி பதில்!

சவுக்கு சங்கர், குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு குறித்த கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடி பதில் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், சமீப காலமாக ஆர்எஸ்எஸ், பாஜகவினர் அதிகமாக அம்பேத்கரை பற்றி பேசி வருகிறார்களே என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், வாக்குத்தான். அவர்கள் எந்த அளவுக்கும் போவார்கள். இவ்வளவு நாள் இல்லாமல் இப்போதுதான் உங்களுக்கு அம்பேத்கர் தெரிகிறது. சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 3 ஆயிரம் கோடிக்கு எதற்கு சிலை வைத்தீர்கள். நாட்டின் பெருமை காந்தியா, அம்பேத்கரா, வல்லபாய் படேலா? இந்தியாவை தாண்டி வல்லபாய் படேல் வேறு எங்கேயாவது தெரிவாரா என்று நீங்களே (பத்திரிகையாளர்ள்) சொல்லுங்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று ரொம்ப தூரம் போக வேண்டாம். மலேசியா, சிங்கப்பூருக்கு சென்று கேட்போமா? வாருங்கள்" என்றார்.

என்எல்சிக்கு எதிராக மக்கள் போராடி வருவது குறித்தக் கேள்விக்கு பதில் அளித்த சீமான், "இது இப்போது இல்லை. நீண்ட காலமாக இருந்துக் கொண்டு இருக்கிறது. நிலத்தை கையகப்படுத்தும் தீவிரத்தை வேலை வாய்ப்பு கொடுப்பதில் காட்ட வேண்டும். நிலம் என்னுடையது. வலம் என்னுடையது. ஆனால் வேலைவாய்ப்பு வேறு ஒருவருக்கு. இதனை எதிர்த்து விரைவில் போராட உள்ளோம். தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் அதிகரித்துவிட்டனர். இது என்னவாகும் என்றால், அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்துவிடுவார்கள். அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்துவிட்டால் இந்த நிலத்தின் அரசியலையும், அதிகாரத்தையும் அவர்கள் தீர்மானித்துவிடுவார்கள். அவர்கள் தீர்மானித்துவிட்டால் நான் அரசியல் அதிகாரமற்ற அடிமையாகிவிடுவேன். அடிமையான நிலமற்றவனாகி விடுவேன். ஈழத்தில் என்ன நடந்ததோ அதேபோலத்தான் நான் விரட்டியடிக்கப்படுவேன். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தாலும் வாக்குரிமையை கொடுத்துவிடாதீர்கள். அவர்கள் அங்கே சென்று வாக்குரிமை போடட்டும். அதைத்தான் திரும்ப திரும்ப வலியுறுத்துகிறோம். அந்த தவறை திரும்ப செய்துவிட்டால் நாங்கள் அடித்து விரட்டப்படுவோம். அதற்குள் தமிழ் மக்கள் எச்சரித்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

நாடாளுமன்ற தேர்தல் குறித்து திட்டமிடுதல் ஏதாவது இருக்கிறதா என்ற கேள்விக்கு, ஒரே திட்டம்தான். 40 தொகுதிகளில் போட்டியிடுவோம். 20 ஆண்கள், 20 பெண்கள் போட்டியிடுவார்கள்" என்றார்.

சவுக்கு சங்கரை நீங்கள் வெளிப்படையாக ஆதரிக்கிறார்கள். அவருக்காக உங்கள் சின்னத்தில் போட்டியிட அனுமதிப்போம் என்று கூறி இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான், "தனித்து போட்டியிட சவுக்கு சங்கர் விரும்பினால் நாங்கள் ஆதரிப்போம்" என்றார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கியை சூடு தற்செயலாக நடந்தது என்றும் பிரபாகரன் ஆயுத வெறி கொண்டு ஈழம் என்ற கனவை சிதைத்து விட்டார் என்றும் அதேபோல் ஸ்ரீமதி மரணம் குறித்து எந்த ஊடகங்கள் எல்லாம் பேசுகிறதோ அந்த ஊடகத்தை தடை செய்ய வேண்டும் என்றும் பேசி இருக்கிறார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?. இதற்கு பதில் அளித்த சீமான்,"நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரிகிறது. ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. அது அவருடைய கருத்து. இதில் என்னுடைய நிலைப்பாடு என்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். மாற்று கருத்துடையவர்களை நேசிக்கக்கூடாது, அவர்களிடம் உறவு வைக்கக்கூடாது என்று சொன்னால் எப்படி? எனக்கு சாமியை விட வாழுகிற பூமி முக்கியம். பூமியை காப்பாற்ற நான் போராடுகிறேன். நீங்கள் சாமியை காப்பாற்ற போராடுகிறீர்கள். ஸ்டெர்லைட்டில் துப்பாக்கி சூடு நடத்தியது தவறு என்று நான் தர்க்கம் பண்ணுவேன். அதற்காக அவரை வெறுக்க முடியாது. மனித வெறுப்பு வேறு, கருத்து முரண்பாடு வேறு. நீங்கள் போட்டு குழப்பிவிடாதீர்கள்" என்றார்.

குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வந்திருக்கிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான், வாக்குப்பதிவு எப்படி நடந்தது என்று உங்களுக்கு வீடியோவை நான் காண்பிக்கட்டுமா. அந்த வெற்றிக்கு நாண்டு கொண்டு நின்று சாகலாம், தூக்கில் தொங்கலாம். அது ஒரு வெற்றின்னு பேசுவதற்கு விஷம் குடித்து சாகலாம். அல்லது தூக்கில் தொடங்கலாம். அது ஒரு வெற்றி. கேவலம் ஒருவர் வாக்குப்பதிவு செலுத்த வந்தால் அவரை அங்கேயே நிறுத்திவிட்டு, இங்கே வாக்கு போடுகிறார்கள். ஒரே ஆள் அனைத்து வாக்கும் போட்டிருக்கிறார். இதை வெற்றி என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? 8-வது முறை அல்ல, 80-வது முறை ஜெயித்தாலும் அது கேவலம். அவ்வளவு தான் சொல்ல முடியும்" என்றார் ஆவேசத்துடன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in