சாவர்க்கரை தொடர்ந்து விமர்சிக்கும் ராகுல் காந்தி: எச்சரிக்கை விடுக்கும் சிவசேனா!

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்
சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்

சாவர்க்கர் குறித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் கருத்துகள் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணியின் ஒற்றுமையை பாதிக்கலாம் என்று சிவசேனாவின் உத்தவ் தாக்கரே தலைமையிலான பிரிவு எச்சரித்துள்ளது.

ராகுல் காந்தி குறித்த சாவர்க்கரின் கருத்துகளுக்கு பதிலளித்து பேசிய உத்தவ் தலைமையிலான சிவசேனா பிரிவின் தலைவர் சஞ்சய் ராவத், “எங்கள் கட்சியின் சித்தாந்தம் சாவர்க்கரின் கருத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது. எனவே ராகுல் காந்தியின் கருத்து சிவசேனாவால் ஏற்றுக்கொள்ள முடியாதது. பொதுவான குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படையில் மகா விலாஸ் அகாடி கூட்டணி அமைக்கப்பட்டது. எனவே சாவர்க்கர் குறித்து விமர்சித்திருக்கக் கூடாது. வீர் சாவர்க்கர் பிரச்சினையை இப்போது எழுப்ப எந்த காரணமும் இல்லை. நாங்கள் அவரை வணங்குவதால், இது எம்விஏ கூட்டணியில் விரிசல்களுக்கு வழிவகுக்கும்

சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி விமர்சித்தது சிவசேனாவை மட்டுமல்ல, மகாராஷ்டிராவில் உள்ள சில காங்கிரஸ் தலைவர்களையும் பாதித்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள மக்களும், நாட்டிலுள்ள பெரும் பகுதி மக்களும் வீர் சாவர்க்கர் மீது மரியாதை வைத்துள்ளனர்” என்று கூறினார்.

வியாழன் அன்று மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள வடேகானில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது ராகுல் காந்தி, சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்ததாகவும், பயத்தில் அவர்களுக்கு கருணை மனு எழுதி ஓய்வூதியம் பெற்றதாகவும் குற்றம் சாட்டினார். இரண்டு நாட்களுக்கு முன்பும் அவர் இதே போன்ற கருத்துக்களை தெரிவித்திருந்தார். சாவர்க்கர் மீதான ராகுல்காந்தியின் தொடர்ச்சியான தாக்குதல்கள் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதற்கிடையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவைச் சேர்ந்தவர் அளித்த புகாரின் பேரில், சாவர்க்கரை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக ராகுல் காந்தி மீது மகாராஷ்டிரா காவல்துறை அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ராகுல் காந்தி இந்துத்துவா சித்தாந்தவாதிகளை குறிவைக்கவில்லை. அவர் ஒரு வரலாற்று உண்மையை மட்டுமே வெளிப்படுத்தினார், எனவே இது எம்விஏ கூட்டணியை பாதிக்காது என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in