சசிகலாவின் தி.நகர் பினாமி சொத்து முடக்கம்: வருமான வரித்துறை அதிரடி

சசிகலாவின் தி.நகர் பினாமி சொத்து முடக்கம்: வருமான வரித்துறை அதிரடி

பினாமி பெயரில் வாங்கப்பட்ட சசிகலாவின் தி.நகர் சொத்தை வருமான வரித்துறை அதிடியாக முடக்கியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வெளியே வந்த சசிகலாவுக்கு சோதனைக்கு மேல் சோதனை நடந்து வருகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, கட்சியை மீட்க போராடி வருகிறார். இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா உள்பட அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

முதல் கட்டமாக சென்னை, கோவை, புதுச்சேரியில் உள்ள 9 சொத்துகளையும், போயஸ் கார்டன், தாம்பரம், சேலையூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் உள்ள சொத்துகளையும், கோடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா ஆகிய சொத்துகளையும் வருமான வரித்துறையினர் முடக்கினர். இதன் பின்னர் சென்னையை அடுத்த பையனூரில் உள்ள 49 ஏக்கர் நிலைத்தை முடக்கியது வருமான வரித்துறை.

இதனிடையே, சென்னை தி.நகரில் உள்ள பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தை பினாமி பெயரில் சசிகலா வாங்கியிருப்பதாக உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. இதையடுத்து, 15 கோடி மதிப்புள்ள அந்த சொத்தை வருமான வரித்துறை இன்று அதிரடியாக முடக்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in