குரு பூஜைக்கு எடப்பாடியார் வந்தால் ரணகளமாகும்... பகீர் கிளப்பும் சசிகலா டீம்!

பசும்பொன்னில் ஓபிஎஸ் உடன் அஞ்சலி செலுத்தும் எடப்பாடி பழனிசாமி (பழைய படம்)
பசும்பொன்னில் ஓபிஎஸ் உடன் அஞ்சலி செலுத்தும் எடப்பாடி பழனிசாமி (பழைய படம்)

பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டால் குருபூஜையில் பெரிய பிரச்சினையே வரும். அவர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று சசிகலா ஆதரவாளர் தேனி கர்ணன் எச்சரித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த மாதம் 30ம் தேதி பசும்பொன் தேவர் குருபூஜையில்  கலந்து கொள்வதற்காக  பசும்பொன்னிற்கு செல்ல உள்ளார். இது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சசிகலா ஆதவாளர் தேனி கர்ணன்  யூடியூப் சேனல் ஒன்றுக்கு  பேட்டி அளித்துள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். "எடப்பாடி பழனிசாமி துரோகம் மேல் துரோகம் செய்துவிட்டார். சசிகலாவை ஏமாற்றினார். அதன்பின் டி.டி.வி.தினகரனை ஏமாற்றினார். ஆட்சிக்கு 4 ஆண்டுகள் உறுதுணையாக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை  ஏமாற்றினார். 

அப்படி இருக்க அவரை எப்படி தென் மண்டல மக்கள் நம்புவார்கள். அவரை எப்படி  ஏற்றுக்கொள்வார்கள். அவர் இதை மீறி எப்படி தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள முடியும்? பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டால் குருபூஜையில் பெரிய பிரச்சினையே வரும். 

குருபூஜையில் போலீஸ் பாதுகாப்பு அவருக்கு கொடுக்கப்படலாம்.  ஆனால் அதையும் மீறி செருப்பை தூக்கி ஒருவர் வீசினால் எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய முடியும். தூரத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நோக்கி செருப்பு பறந்து வந்து தாக்கினால் என்ன செய்வார்.

தென் மாவட்ட மக்கள் அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். அவருக்கு அச்சம் இருக்கிறது. அதனால்தான் அவரால் மதுரைக்கு கூட வர முடியவில்லை.  மதுரையில் அதிமுக நடத்தியது பெரிய மாநாடா?

தேனி கர்ணன்
தேனி கர்ணன்

நான் தூண்டவில்லை. ஆனால் பசும்பொன் வந்தால் அவர் மீது தாக்குதல் நடக்கும். தேவர் சமூகத்தை சேர்ந்தவர்களை எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார். அவர்களை ஏமாற்றிவிட்டார். அரிவாளை எடுத்து வெட்ட மாட்டார்கள். ஆனால் எவனாவது ஒருவன் வந்து செருப்பை எடுத்து வீசி அடிப்பான். 

எடப்பாடி பழனிசாமி வந்தால் அது சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும்.  அங்கே மக்கள் மனநிலை அப்படி உள்ளது. இவரை மக்கள் எட்டப்பனாக பார்க்கிறார்கள்.  காந்தியை கொன்ற கோட்ஸே போல பார்க்கிறார்கள். அப்படி இருக்க அவர் எப்படி குருபூஜைக்கு வர முடியும். மக்கள் அவரை நம்ப மாட்டார்கள். முக்குலத்தோர் அல்ல தென் மாவட்டத்தில் யாருமே அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.


இதையும் வாசிக்கலாமே...


மிஸ் பண்ணாதீங்க ... ஆவின் தீபாவளி காம்போ ஆஃபர் அறிவிப்பு!

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வேன்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்!

நடிகை அமலாபால் 2வது திருமணம்... லிப் கிஸ் கொடுத்து காதலனை அறிமுகப்படுத்தினார்!

பகீர்... திமுக பிரமுகர் மகன் படுகொலை; சென்னையில் பரபரப்பு!

பிரபல நடிகையின் மகன் மர்ம மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in