அதிக அளவு தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு இளவரசி மருமகள் தற்கொலை முயற்சி: சசிகலா அதிர்ச்சி

விவேக் ஜெயராமன் திருமணத்தில் சசிகலா.
விவேக் ஜெயராமன் திருமணத்தில் சசிகலா.

குடும்பத் தகராறு காரணமாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் மனைவி கீர்த்தனா அதிகளவில் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் ஒவ்வாமைக்கான மாத்திரைகளைத் தான் உட்கொண்டார் என்று விவேக் தரப்பில் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அண்ணன் ஜெயராமன். இவரது மனைவி இளவரசி. இவர்களது மகன் விவேக் ஜெயராமன்(32) 'ஜாஸ் சினிமா' உட்பட பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா(28). சென்னை பட்டினப்பாக்கம், எம்ஆர்சி நகரில், சொகுசு பங்களாவில் விவேக்குடன் கீர்த்தனா வசித்து வந்தார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் விவேக் ஜெயராமனுக்கும், அவரது மனைவி கீர்த்தனாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கீர்த்தனா அதிக அளவு தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அவர் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த விவேக், மயக்க நிலையில் இருந்த கீர்த்தனாவை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதலுதவி அளித்துள்ளார். இதன்பின் அடையாறில் உள்ள, தனியார் மருத்துவமனையில் கீர்த்தனாவை அனுமதித்துள்ளார். ஆனால், கீர்த்தனா தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. ஒவ்வாமைக்கான மாத்திரைகளை உட்கொண்டதால் தான் மயக்கமடைந்தார் என விவேக் ஜெயராமன் தரப்பில் போலீஸாரிடம் கூறப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சசிகலா உள்ளிட்டோர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in