பெண்மையைக் கொண்டாடாத வீடு,நாடு பாழ்: சசிகலாவின் அறிக்கைக்கு அதிமுக உடனடி ரியாக்ட்

பெண்மையைக் கொண்டாடாத வீடு,நாடு பாழ்: சசிகலாவின் அறிக்கைக்கு அதிமுக உடனடி ரியாக்ட்

எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப்படவில்லையோ அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதிலடி தந்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தான் செல்லும் இடங்களில் எல்லாம் குறிப்பாக விடும் அனைத்து அறிக்கைகளிலும் அதிமுகவின் ஒற்றுமையை வலியுறுத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அணிகளை தனது தலைமையில் இணைத்து விட வேண்டும் என முழு முயற்சியை எடுத்து வருகிறார். ஆனால் அவரது முயற்சிகளுக்கு தனது ஆதரவாளர்கள் மூலமாக முட்டுக்கட்டை போட்டு அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா தனது ஆதரவாளர்களிடம் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோமென நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசியுள்ளார்.

இந்த நிலையில்தான் விவேகானந்தர் பிறந்த நாள் செய்தி என்ற பெயரில், ஈபிஎஸ் அணிக்கு தூது விடும் வகையில் அறிக்கையை சசிகலா வெளியிட்டுள்ளார். அதில், " எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள். தன்னலம் சிறிதும் இல்லாமல் நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்கு தேவைப்படுகிறார்கள். எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப்படவில்லையோ அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ். சுயநலமின்றி பொதுநலத்தோடு வாழும் கலையை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வோம் என உறுதியேற்போம்" என கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

இந்த அறிக்கை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம் பேசிய போது, " மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்ற பெண்மையை மட்டுமே அதிமுக கொண்டாடும்" என ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in