`இது வழக்கமான நடைமுறையே'- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகலா புஷ்பா

`இது வழக்கமான நடைமுறையே'- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகலா புஷ்பா

முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா, அதிமுக எம்.பியாக இருந்த போது டெல்லியில் மத்திய அரசு ஒதுக்கிய வீட்டை இன்னும் காலி செய்யவில்லை. இதனால் அவர் வீட்டில் இருந்த பொருள்கள் எல்லாம் எடுத்து அரசே வீதியில் வைத்துள்ளது என்பதாக வாட்ஸ்-அப்களில் ஒரு தகவல் அலையடித்தது. இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா இவ்விஷயத்தில் நடந்தது என்ன என தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா கூறுகையில், ”எம்.பியாக இருந்தவர்களுக்கு கோட்டாவில் டெல்லியில் வீடு ஒதுக்கி உள்ளது. அதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பித்தல் செய்வது வழக்கம். அனைத்து எம்.பிக்களுக்கும் இதுதான் நடைமுறை. அந்த அடிப்படையிலேயே எனக்கும் வீடு ஒதுக்கப்பட்டது. கடந்த நான்கு மாதங்களாக அதிக கட்சிப்பணி இருந்ததால் டெல்லிக்கு செல்லவில்லை. இந்நிலையில் வீட்டைக் காலி செய்ய டெல்லியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதுவும் வழக்கமான நடைமுறையே.

டெல்லியில் எனக்கு சொந்த வீடும் உள்ளது. இங்கிருந்து பொருள்களை அங்கே எடுத்துச்செல்வேன். ஆனால், சிலர் என்னைப் பற்றி அவதூறு பரப்புகிறார்கள். அதில் ஒன்றிய அரசு என்னும் வார்த்தையும் உள்ளது. இதை யார் சொல்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். என்னைக் குறித்து அவதூறு பரப்புவோர் மீது சிப்காட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in