புரட்சிப் பயணம், புதிய பாதை: ஓபிஎஸ்-ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில் தொண்டர்களுக்கு சசிகலா திடீர் அழைப்பு!

புரட்சிப் பயணம், புதிய பாதை: ஓபிஎஸ்-ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில் தொண்டர்களுக்கு சசிகலா திடீர் அழைப்பு!

அதிமுகவிற்குள் பிரச்சினைகள் ஓங்கி ஒலிக்கும் நிலையில், தனது புரட்சிப் பயணத்தை அறிவித்துள்ள சசிகலா, அதில் கலந்து கொள்ள வருமாறு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஒற்றைத் தலைமை பிரச்சினையால் அதிமுகவிற்குள் களேபரங்கள் வெடிக்கத் தொடங்கிய நிலையில், பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக சசிகலாவிடம் இருந்து தூது வந்தது. இதைத் தொடர்ந்து ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விட்டார் பன்னீர் செல்வம். ஆனாலும் எடப்பாடி பழனிசாமிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக் கொண்டே இருந்தது. இந்நிலையில் வானகரத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அவர் பாதியிலேயே வெளியேறும் நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் சசிகலா தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தாலும் போதிய செல்வாக்கு இருவருக்கும் இல்லை என்பதை உணர்ந்தார். இந்த நிலையில் மீண்டும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முடிவை சசிகலா எடுத்துள்ளார். அதில் கலந்து கொள்ள வருமாறு தொண்டர்களுக்கு அவரின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், “மண்ணின் பெருமைகளையும், பெண்ணினத்தில் பெருமைகளையும் பேணிக்காத்திடும் வகையில் சசிகலா புரட்சிப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். வருகின்ற 26.06.2022 அன்று மதியம் 12.30 மணிக்கு தி.நகர் இல்லத்திலிருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் ரோடு வழியாகத் திருத்தணி பைபாஸ் வந்தடைகிறார். அங்கிருந்து திருத்தணி, குண்டலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திக்கிறார். குண்டலூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, கோரமங்கலம், கே.ஜி. கண்டிகை, எஸ்விஜி புரம், கிருஷ்ணாகுப்பம், ஆர்கே பேட்டை, அம்மையார் குப்பம் ஆகிய இடங்களில் தொண்டர்களைச் சந்திக்கிறார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in