பண்ருட்டி ராமச்சந்திரனுடன் திடீர் சந்திப்பு; பரபரப்பு பேட்டி - சசிகலாவின் அதிரடி மூவ்!

பண்ருட்டி ராமச்சந்திரனுடன் திடீர் சந்திப்பு; பரபரப்பு பேட்டி - சசிகலாவின் அதிரடி மூவ்!

அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா இன்று சந்தித்தார்.

சென்னை அசோக் நகரில் அதிமுகவின் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உடனான சந்திப்புக்கு பின்னர் பேசிய சசிகலா, “ மூத்த அண்ணன் இவர், எனவே மரியாதை நிமித்தமாக பார்ப்பதற்காக வந்தேன். அரசியல் ரீதியாகவும் கலந்து பேசினோம்” என தெரிவித்தார்.

நீங்களும் ஓபிஎஸ்சும் இணைந்து செயல்பட வேண்டும் என தேவர் அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சசிகலா, “ அதிமுகவில் உள்ள அனைவரும் எனக்கு வேண்டியவர்கள்தான். எனவே அனைவரும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தபோது சாதி, மதம் பார்த்ததில்லை. அந்த அடிப்படை கொள்கை இப்போதுவரை எனது மனதில் உள்ளது. அதிமுக அனைத்து சாதி, மதத்தை ஒன்றாக நினைக்கும் இயக்கமாகும். அந்த வழியில் என் பயணம் தொடரும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு இயக்கத்தில் சில நேரங்களில் இதுபோல சோதனை உருவாகும், பின்னர் அது சரியாகிவிடும். அதுபோல இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் சரியாகும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அனைவரும் இணையும் சூழல் உருவாகும். ஓபிஎஸ், ஈபிஎஸ் என யார் பக்கமும் நான் இல்லை. நான் தொண்டர்களின் பக்கம்தான் உள்ளேன். தொண்டர்களின் எண்ணப்படி எனது தலைமையில் அதிமுக விரைவில் இயங்கும் என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in