அதிமுகவில் சசிகலா வாக்காளராக பயணிக்கலாம்: ராஜன் செல்லப்பா பரபரப்பு

ராஜன் செல்லப்பா
ராஜன் செல்லப்பாஅதிமுகவில் சசிகலா வாக்காளராக பயணிக்கலாம்

அதிமுகவில் சசிகலா வாக்காளராக பயணிக்கலாம் என ராஜன் செல்லப்பா எம்எல்ஏ மதுரையில் கூறினார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து மதுரை மாவட்ட புறநகர் கிழக்கு அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று நடந்தது. இதன்பின்னர் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது.., "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை வலிமையுடன் எதிர்க்கும் சக்தி ஈபிஎஸ் தலைமையிலான அணிக்கு மட்டுமே உண்டு. இரட்டை இலை சின்னத்தை யார் வேண்டுமானாலும் ஆதரிக்கலாம். நாங்கள் ஆதரிப்பது ஈபிஎஸ்சை தான். அமைச்சர் மனோஜ் தங்கராஜ் அதிமுகவிற்குள் சிலம்பமாட தேவையில்லை. எங்களிடம் எடப்பாடியார் எனும் ராஜதந்திரி உள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எங்களது வெற்றியின் முதல் படி இது.

திமுகவின் அதிகாரம், பண பலத்தை எதிர்கொள்ள அதிமுகவிற்கு முழு தைரியம் உள்ளது. பேனா நினைவு சின்னம் ஓபிஎஸ் எதனடிப்படையில் சம்மதம் தெரிவித்தார் என தெரியவில்லை. அவரது சுய லாபத்திற்காக கூறினாரா?. சசிகலா வாக்காளராக ஈபிஎஸ்க்கு கூட வாக்களிக்க வரலாம். அவர் கட்சியில் கிடையாது. அவர் வாக்காளராக அதிமுகவில் இணைந்து பயணிக்கலாம். எங்களை பொறுத்தவரை சசிகலாவிற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்புமில்லை" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in