அதிமுகவில் தற்போது நடப்பது பங்காளிச் சண்டை... சசிகலா பேட்டி!

சசிகலா
சசிகலா

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். அதிமுகவில் நடப்பது பங்காளி சண்டைதான் என்று சசிகலா கூறினார்.

மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல்

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வேட்பாளர் தேர்வில் அனைத்துக் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக, திமுக உள்பட பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்தல் பிரசாரத்திற்கும் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே நடைபெற்ற விழாவில் இன்று பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், என்னைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது மக்கள் தான். மக்களவைத் தேர்தலுக்குப் பின் மூன்று அணிகளாக உள்ள அதிமுக ஓரணியில் சேர வாய்ப்புள்ளது என்பது எனது அனுமானம். அப்போது அதிமுகவின் பலம் என்ன என்பது அனைவருக்கும் புரியும்.

சசிகலா
சசிகலா

2026 சட்டப்பேரவை தேர்தல் என்பது எங்களுக்கும், திமுகவுக்கும் நேரடிப் போட்டியாக இருக்கும். அப்போது நான் யார் என்பதை காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன். மக்களவைத் தேர்தலில் யார் மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வரவேண்டும் என்பதை சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்திருப்பது அதிமுகவின் பங்காளி சண்டை. வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் அவர் அதிமுக வேட்பாளராகவே போட்டியிடுவார். அந்த தேர்தலில் அதிமுக ஓரணியில் இணைந்து வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் அமரும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அமெரிக்காவை அதிரவைக்கும் செக்ஸ் ஸ்டிரைக்... மனைவிகள் போராட்டத்தால் கதறும் கணவர்கள்

மகனுக்கு சீட் இல்லை... திமுக தலைமை மீது பொன்முடி அதிருப்தி!

சுயேச்சைகள் ஆட்டம் ஆரம்பம்... சவப்பெட்டியுடன் வேட்புமனு தாக்கலுக்கு வந்த வேட்பாளர்!

எலெக்‌ஷன் நேரத்துல மூச்சு விடக்கூட பயமா இருக்கு... நடிகர் ரஜினிகாந்த் மிரட்சி!

களமிறங்கும் விஜயகாந்த் குடும்பம்... விருதுநகரில் விஜய பிரபாகரன்; கள்ளக்குறிச்சியில் சுதீஷ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in