‘சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை’ - செல்லூர் ராஜூ திட்டவட்டம்!

‘சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை’ - செல்லூர் ராஜூ திட்டவட்டம்!
செல்லூர் ராஜூ

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறினார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் செல்லூர் ராஜூ கூறுகையில், ‘’வைகை ஆற்றில் அழகர் இறங்கும்போது கூட்டநெரிசலில் இருவர் உயிரிழந்தது மோசமான சம்பவம். இந்தச் சம்பவத்திற்கு மதுரை மாவட்ட நிர்வாகம், காவல் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆகியோர்தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். முக்கியமானவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பார்த்துப் பார்த்து பாதை ஒதுக்கியவர்கள் சாமானிய மக்களைப் பற்றி சிந்திக்கவே இல்லை. அவர்களுக்குப் பாதையும் ஏற்படுத்தித் தரவில்லை. மதுரையில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.

சசிகலா குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த செல்லூர் ராஜூ, “அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் சம்பந்தம் இல்லை. நாட்டில் என்னவெல்லாமோ பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி எதிர்க்கட்சிகளிடம் கேளுங்கள்” எனப் பேட்டியை முடித்துக்கொண்டார்.

Related Stories

No stories found.