முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறேன்... டிவியில் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?: சவால் விடும் சரத்குமார்!

அண்ணாமலையுடன் சரத்குமார்
அண்ணாமலையுடன் சரத்குமார்

ஜிஎஸ்டி வரி குறித்து தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க முதல்வர் ஸ்டாலின் தயாரா என நடிகர் சரத்குமார் சவால் விடுத்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு  நடைபெற இன்னும் ஒருசில தினமே இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் ஜுரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவும். மாநிலத்தில் ஆளும் திமுகவும் பரஸ்பரம் கடுமையாக மோதிக் கொள்கின்றன. இரண்டு கட்சிகளும்  ஒன்றுக்கு ஒன்று சவால் விடுத்து கேள்வி எழுப்பி வருகின்றன. 

திமுக ஊழல் கட்சி என்று பாஜக குற்றம் சாட்டியிருக்கும் நிலையில் தேர்தல் பத்திரம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி  பாஜக  குறித்து திமுக பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஜிஎஸ்டி வரி என்பது ஒரு வழிப்பறி என முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடுமையாக சாடியிருந்தார். 

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டிருந்த பதிவில், ’’ 'பிணத்தின் மீதுதான் ஜிஎஸ்டியை அமல்படுத்த முடியும்' என்று குஜராத் முதலமைச்சராக இருந்தபோது எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், ஜிஎஸ்டி பொருளாதாரச் சுதந்திரம் என்று ஒரே நாடு ஒரே வரி கொண்டு வந்தார். 

ஓட்டல் முதல் டூவீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா? ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஓட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்துப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியை தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது" என்று ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

ராதிகா சரத்குமார்
ராதிகா சரத்குமார்

இந்த நிலையில் அண்மையில் பாஜகவில் இணைந்துள்ள நடிகர் சரத்குமார், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையில் இதுகுறித்து சவால் விடுத்துள்ளார். "முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறேன்.  ஜிஎஸ்டி குறித்து நன்கு படித்துவிட்டு அவர் என்னுடன் நேருக்கு நேர் விவாதத்துக்கு வரட்டும்.  ஒரு டிவி சேனலில் அவருடன் விவாதிக்க நான்  தயாராக இருக்கிறேன். அவர் தயாரா?" என சரத்குமார் சவால் விடுத்துள்ளார்.

பொதுவாக முதல்வரின் கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் அண்ணாமலை போன்ற தலைவர்கள் தான் பதில் கூறிவரும் நிலையில் தற்போது சரத்குமார் சவால் விடுத்துள்ளது அரசியல் அரங்கில் பரபரைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in