சிறையில் வாடும் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்: நில மோசடி வழக்கில் மேலும் காவல் நீட்டிப்பு!

சிறையில் வாடும் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்: நில மோசடி வழக்கில் மேலும் காவல் நீட்டிப்பு!

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்துக்கு செப்டம்பர் 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் அரங்கேற்றிய அரசியல் கலகம் உச்சத்தில் இருந்தபோது, ஜூன் 28-ல் சஞ்சய் ராவத்துக்கு பாத்ரா சாவல் நில மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்ததைக் காரணம் காட்டி, விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என்று அவர் மறுத்துவிட்டார். அமலாக்கத் துறை முடிந்தால் தன்னைக் கைதுசெய்யட்டும் என்றும் சவால் விட்டார். டிஎச்எஃப்எல் - யெஸ் வங்கி வழக்கில் புணேயைச் சேர்ந்த தொழிலதிபர் அவினாஷ் போஸலேயிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, இந்த இரண்டு வழக்குகளுக்கும் தொடர்பு உள்ளதால் தொழிலதிபரை வைத்து சஞ்சய் ராவத்தின் மீதான பிடியை இறுக்கத் தொடங்கியது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து மும்பையில் சட்டவிரோக பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவருக்குச் செப்டம்பர் 5-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருந்தது. இன்றுடன் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், செப்டம்பர் 22-ம் தேதிவரை அவரின் நீதிமன்றக் காவலரை நீட்டித்துச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in