மாணவிகள் பேசப்போகும் சனாதனம்! வானதி சீனிவாசன் கேள்விக்கு அரசு கல்லூரி முதல்வர் விளக்கம்!

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

சனாதன எதிர்ப்பு கருத்துக்களை மாணவிகள் பேச வேண்டும் என்று திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி முதல்வர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு கல்லூரி முதல்வர் பதில் அளித்து இருக்கிறார்.

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி முதல்வர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வானதி சீனிவாசன் கேள்விகளை எழுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில், அண்ணா பிறந்தநாளான வரும் 15ம் தேதி மாலை 3 மணி அளவில் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவிகள் சனாதன எதிர்ப்பு பற்றிய தங்களின் ஆழ்ந்த கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்ற குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்புள்ள வானதி சீனிவாசன், சனாதனம் குறித்து அரசு கல்லூரி மாணவிகள் இடையே திமுக நஞ்சை விதைப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார். திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கை அரசியல் சாசன அமைப்புக்கு எதிராக இல்லையா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதற்கு திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி முதல்வர் பதில் அளித்துள்ளார். அதில், ''யாருக்கும் சாதக பாதகம் இல்லாமல் நடுநிலையோடு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகள் சனாதனம் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மாணவிகள் தங்களது சொந்த விருப்பத்தின் பெயரிலேயே செயல்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in