சனாதன சர்ச்சை... அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்காதது கடமை தவறிய செயல்; நீதிபதி கருத்து!

சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி
சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி, சேகர்பாபு
சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி, சேகர்பாபு

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சனாதன தர்மத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக கோ வாரண்டோ வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், திராவிட கொள்கை எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேர்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசியதன் விளைவாகவே தற்போது திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது மக்களுக்குள் சாதி, மதம் மற்றும் கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக மது உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும், எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது என்று தெரிவித்த நீதிபதி, சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டது காவல்துறை தங்களுடைய கடமையை புறக்கணித்து போன்றது எனவும் இரண்டு அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD AMBIKA| ‘முதல் மரியாதை’ மீது அம்பிகாவுக்கு வந்த பொறாமை!

தீபாவளி கொண்டாட்டம்... 16,895 பேருந்துகள் இயக்கம்... எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து? முழு விபரம்!

அதிர்ச்சி... பெண் அதிகாரி கழுத்தறுத்து கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்

பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! உயிர் தப்பிய குடும்பம்

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 4வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in