அண்ணாமலையின் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் யாத்திரை: காயத்ரி ரகுராம் அதிரடி

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை டேக் செய்து தினமும் ஏதாவது ட்வீட் போட்டு வரும் காயத்ரி ரகுராம், இன்றும் அண்ணாமலைக்கு எதிராக ‘சக்தி யாத்திரையை’ ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜகவிலிருந்து சமீபத்தில் விலகிய காயத்ரி ரகுராம், “ஜனவரி 27-ம் தேதி சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நடைபெறவிருந்த எனது “சக்தி யாத்திரையை” ஏப்ரல் 14-ம் தேதிக்கு மாற்றுகிறேன். இந்த தேதி மாற்றத்திற்கு ஈரோடு இடைத்தேர்தலும் ஒரு காரணம். அரசியல் கட்சியிலிருந்து வெளியே வந்த பிறகு நானும் ஒரு சாமானிய பெண் என்பதால் எனக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன.

எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு இல்லை. எனவே ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவருக்கு எதிராக நீதிக்கு போராடும் ஒரு பெண் என்ற முறையில் நான் கவனமாக இருக்க வேண்டும், ஆனாலும் நான் பயப்பட மாட்டேன். ஆகையால் அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன். உண்மையும் நீதியும் வெல்லும்" என்று தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in