பட்டியலின இளைஞரை மிரட்டிய சேலம் திமுக ஒன்றிய செயலாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

பட்டியலின இளைஞரை மிரட்டிய சேலம் திமுக ஒன்றிய செயலாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்.
பட்டியலின இளைஞரை மிரட்டிய சேலம் திமுக ஒன்றிய செயலாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்.பட்டியலின இளைஞரை மிரட்டிய சேலம் திமுக ஒன்றிய செயலாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

பட்டியலின இளைஞரை மிரட்டிய சேலம் திமுக ஒன்றிய செயலாளர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

சேலம் மேற்கு வட்டத்தில் உள்ள திருமலை கிராமத்தில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட வேண்டும் என்று பட்டியலின சமூகத்தைச் சார்ந்த பிரவீன் என்பவர் கேட்டிருக்கிறார். இதனை அறிந்த உயர்சாதியினர், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் கோயிலுக்குள் சென்றால் கோயில் தீட்டாகிவிடும் என்றும் சாதி இந்துக்களாகிய நாங்கள் கோயிலுக்குள் வரமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும் திருமலைகிரி ஊராட்சி மன்றத் தலைவருமான டி.மாணிக்கம் என்பவர் கடந்த 27-ம் தேதி கிராமத்து மக்கள் அனைவரையும் கூட்டி வைத்து ஆபாசமாக திட்டியதோடு, வாலிபர் பிரவீனுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சேலம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் டி.மாணிக்கம் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் டி.மாணிக்கம் கழக கட்டுப்பாட்டு மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்" என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in