
சேலம் விமான நிலையத்திற்கு விரைவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்று சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
ஓமலூர் அடுத்துள்ள காமலாபுரத்தில் அமைந்துள்ள சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தினசரி விமான சேவை செயல்பட்டு வந்தது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், கொரோனா காலக் கட்டத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமான சேவையை கொண்டு வர வேண்டும் என சேலம் மற்றும் அண்டை மாவட்ட பொதுமக்கள், அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில், பெங்களூரு- சேலம் - கொச்சின் வழித்தடத்தில் கடந்த 16ம் தேதி விமான சேவை தொடங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது சேலம் - சென்னை இடையேயான விமான சேவை மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் துவங்கியுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து சேலம் வந்த முதல் விமானத்தில் கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை உள்பட 43 பயணிகள் பயணித்தனர்.
அவர்களுக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உற்சாக வரவேற்பு அளித்தார். இதேபோல், சேலத்தில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில், சேலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு உள்பட 64 பயணிகள் சென்றனர். நடிகை நமீதா மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோரும் பயணித்தனர்.
அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எம்.பி பார்த்திபன், "சேலம் மாவட்டம் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக வளர்ச்சி அடைய, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பல்வேறு திட்டங்களைத் தந்தார். எனவே, அவரின் நினைவாக சேலம் விமான நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி விமான நிலையம் என்று பெயர் சூட்ட, விரைவில் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன். அதனைத் தொடர்ந்து, விரைவில் அவரின் பெயர் சூட்டப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு
நாளை கடைசி தேதி.... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!
சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து