தலையில் காவி தொப்பி: சென்னையில் புது கெட்டப்பில் குஷ்பு!

தலையில் காவி தொப்பி: சென்னையில் புது கெட்டப்பில் குஷ்பு!

சென்னையில் பாஜக 42-ம் ஆண்டு துவக்கவிழாவை ஒட்டி இன்று பல்வேறு இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு பங்கேற்று கொடி ஏற்றினார். அப்போது அவர் காவி நிற தொப்பி அணிந்திருந்தார். அவரின் புது கெட்டப்பை பொதுமக்கள் ஆர்வமுடன் வேடிக்கைப் பார்த்தனர்.

நடிகை குஷ்புவுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தொண்டர்களும் காவிநிற தொப்பியை அணிந்திருந்தனர். இதுகுறித்து பாஜகவினரிடம் கேட்ட போது, " குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி பிரச்சாரத்தை துவக்கிய போது, காவி நிற தொப்பி அணிந்திருந்தார். இதையடுத்து அந்த மாநிலம் முழுவதும் பாஜகவினர் காவி தொப்பி அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் நாடு முழுவதும் பாஜக நிகழ்ச்சிகளின் போது தலைவர்களும், தொண்டர்களும் காவி நிற தொப்பி அணிய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நாங்களும் காவி நிற தொப்பி அணிந்தோம்" என்றனர். அவர்கள் அணிந்திருந்த காவி தொப்பியில் பாஜக சின்னமான தாமரை இடம் பெற்றிருந்தது.

Related Stories

No stories found.