ஃபரூக் அப்துல்லா மகளை ரகசியமாக விவாகரத்து செய்த சச்சின் பைலட்!

சாரா அப்துல்லா - சச்சின் பைலட்
சாரா அப்துல்லா - சச்சின் பைலட்

ஃபரூக் அப்துல்லா மகளான சாரா அப்துல்லாவை, சச்சின் பைலட் ரகசியமாக விவகாரத்து செய்த விவரம் தற்போது வெளிப்பட்டுள்ளது. சாரா - சச்சின் திருமணம் போலவே அவர்களின் விவாகரத்திலும் மர்மம் நீடிக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், மறைந்த ராஜேஷ் பைலட். இவரது மகன் சச்சின் பைலட். தந்தையின் மறைவை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் முகமாக இளைஞர்கள் மத்தியில் வளர்ந்தார். 26 வயதிலேயே மக்களவை உறுப்பினராகி இளம் எம்பியாக வசீகரித்தார். மன்மோகன் ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சரவையிலும் இடம் பிடித்தார்.

சாரா -சச்சின்
சாரா -சச்சின்

கட்சியின் ராஜஸ்தான் மாநிலத் தலைவராகவும், துணை முதல்வராகவும் பின்னர் வளர்ந்தார். தற்போதைய மாநில முதல்வரான அசோக் கெலாட்டுடன், சச்சின் பைலட்டின் அதிகார - அரசியல் மோதல் நாடறிந்தது. ராஜஸ்தானில் தற்போது நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் டோங்க் தொகுதியில் சச்சின் பைலட் போட்டியிடுகிறார். இதற்காக சச்சின் பைலட் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது, அதனுடனான பிரமாணப் பத்திரம் வாயிலாக அவரது விவாகரத்து செய்தி அம்பலமாகி உள்ளது.

2004ல் சாரா அப்துல்லா - சச்சின் பைலட் திருமணம் நடந்தது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லாவின் மகள் மற்றும் ஒமர் அப்துல்லாவின் சகோதரி என பிரபல பின்னணி கொண்டவர் சாரா அப்துல்லா. வெளிநாட்டில் படிக்கச்சென்ற போது, இருவருக்கும் இடையே நட்பும் அதனைத் தொடர்ந்து காதலும் பூத்தது. ஆனால் இவர்களின் காதலுக்கு இருவீட்டார் சம்மதம் கிடைக்கவில்லை.

ஃபரூக் அப்துல்லாவுடன் சாரா - சச்சின்
ஃபரூக் அப்துல்லாவுடன் சாரா - சச்சின்

ஃபரூக் அப்துல்லா குடும்பத்தினர் மட்டுமன்றி தேசிய மாநாட்டுக் கட்சியிலும் சாரா காதலுக்கு எதிர்ப்பு நிலவியது. இதன் காரணமாக சில வருடங்களுக்கு காதலர்கள் இருவரும் சந்திக்காது இருந்தனர். காதல் முறிந்தது என்று சொல்லப்பட்ட நிலையில் இருவருமாக துணிந்து திருமணம் செய்துகொண்டனர். அதன் பின்னர் சச்சின் அரசியலில் நுழைந்து மத்திய அமைச்சராக தன்னை நிரூபித்த பிறகே, ஃபரூக் அப்துல்லா குடும்பத்தினர் மருமகனை ஏற்றுக்கொண்டனர்.

இந்த பின்னணியில் சாரா அப்துல்லாவை சச்சின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக விவகாரத்து செய்திருப்பது அவரது வேட்புமனுத் தாக்கல் வாயிலாக வெளிப்பட்டிருக்கிறது. சாரா - சச்சினுக்கு விகார், அரன் என இரு மகன்கள் உள்ளனர். பொதுவாழ்வில் இருக்கும் இளம் அரசியல் தலைவரான சச்சின் பைலட் விவாகரத்தில், அவரது திருமணம் போலவே மர்மம் நீடிக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று கர்வா சௌத்: நிலவை ஏன் பெண்கள் சல்லடை வழியே பார்க்கிறார்கள்?! விரத பலன்களைத் தெரிஞ்சுக்கோங்க!

அதிகாலையிலேயே அதிர்ச்சி... சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு! கதறும் பொதுமக்கள்!

பகீர்...நடுரோட்டில் போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல்.... அதிர்ச்சி வீடியோ

டிகிரி முடித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

குட்நியூஸ்... இன்று முதல் மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in