6-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ரம்மி விளையாட்டு: பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?

6-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ரம்மி விளையாட்டு: பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?

ஆறாம் வகுப்பு கணித புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி நீக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் மாணவர்கள், இளைஞர்கள் எனப் பலரும் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கின்றன. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு சார்பில் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும் அதை நிரந்தர சட்டமாக்கும் நோக்கில் சட்ட மசோதா இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் பரிசீலனையில் நிரந்தர சட்ட மசோதா நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆறாம் வகுப்பு கணித பாடப்புத்தகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த பாடம் இடம் பெற்றிருந்தது. அதில் ரம்மி விளையாட்டு எப்படி விளையாட வேண்டும் என்று கற்பிக்கும் வகையில் பாடம் அமைந்திருந்தது. பள்ளிக் கல்வித்துறை பாடப் புத்தகத்தில் ரம்மி விளையாட்டு குறித்த பாடத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு எழுந்துள்ளதால் தமிழக பள்ளிக் கல்வித்துறை ரம்மி குறித்த பாடத்தை நீக்க முடிவு செய்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கு விநியோகம் செய்யும் புத்தகத்தில் ரம்மி விளையாட்டு இடம் பெறாது எனப் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in