நீங்கள் நீக்கப்பட்டது இதனால்தான்: ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு கடிதம்

ரூபி மனோகரன்
ரூபி மனோகரன்

தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏவுமான ரூபி மனோகரன் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி ரூபி மனோகரனுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் , “சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கடந்த நவம்பர் 17-ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு உங்களுக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில் கால அவகாசம் கேட்டும் மற்றும் உங்கள் கருத்துக்களைக் குறிப்பிட்டும் தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றோம்.

கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கருத்துகள் ஏற்கக் கூடியது அல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு முடிவெடுத்துள்ளது. அடுத்து நடைபெறவுள்ள ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் தாங்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை தாங்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக்குழு அறிவிக்கிறது”என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in