கோவை மாநகராட்சிப் பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சியா? - கல்வித் துறை விசாரணை

ஆர்எஸ்எஸ் பயிற்சி
ஆர்எஸ்எஸ் பயிற்சிகோப்புப் படம்

கோவை மாநகராட்சிப் பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகா பயிற்சி நடந்ததாக சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில், இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் தேவாங்க மேல்நிலைப் பள்ளி சாலையில் மாநகராட்சியின் ஆரம்பப் பள்ளி உள்ளது. இங்கு இன்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகா பயிற்சி நடக்கவிருப்பதாக. நேற்று ஒரு வீடியோ வெளியாகி வைரலானது.

இதைத் தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன், “இதற்குப் பள்ளி வளாகத்தில் அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

ஆனால் கோவை மாவட்ட ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளோ, ‘தொண்டு உள்ளத்துடன் குணத்தோடு பள்ளி வளாகத்தில் குப்பைகளைத்தான் அகற்றினோம். ஆனால் அதைத் திரித்து வீடியோ பரப்பிவிட்டார்கள்’ என மறுத்துள்ளனர்.

இதனிடையே மாநகராட்சி சார்பில் பள்ளி வளாகத்தில் எந்தப் பயிற்சிக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை என விளக்கம் கொடுத்திருக்கும் மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப், இதுகுறித்து கல்வித் துறை விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in