இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில் இந்தியா அமைதிக்கான பாதையை தேர்வு செய்ய வேண்டுமென ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.
விஜயதசமியை முன்னிட்டு நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தசரா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவ்வமைப்பின் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத். ”உலகம் மதப்பிரிவுவாதத்தால் உருவான வெறித்தனம், ஆணவம், வெறி போன்றவற்றை எதிர்கொண்டு வருகிறது. உக்ரைன், காஸா பகுதி, போர்களில் சொந்த நலன்கள் மற்றும் தீவிரவாதத்தின் மோதல் காரணமாக எழும் மோதல்களுக்கு எந்த தீர்வும் இல்லை. இது இயற்கைக்கு மாறாக, உடல் மற்றும் மனநல பிரச்சினைகளை உருவாக்குகிறது.
பயங்கரவாதம், சுரண்டல் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவை அழிவை ஏற்படுத்தக்கூடியவை. உலகத்தால் இந்த பிரச்சினைகளை அதன் புதிய தொலைநோக்குப் பார்வையால் எதிர்கொள்ள முடியாது என்பது தெளிவாகிவிட்டது. எனவே உலகமே இந்தியாவை முன்னுதாரணமாக கொண்டு அமைதி மற்றும் செழுமைக்கான பாதையை வழிகாட்ட வேண்டும்.
சட்டம் ஒழுங்கை பின்பற்றுவதும், அரசியலமைப்பை கடைபிடிப்பதும் ஒழுக்கத்தை பேணுவதும் முக்கியமானது. சுதந்திர நாட்டில் இந்த நடத்தை, தேசபக்தியின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. வன்முறைக்கு சரியான தீர்வு, சமூகம் ஒரு ஒழுங்காக அமைக்கப்பட்ட சக்தியாக மாறுவதிலேயே இருக்கிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முன்முயற்சி எடுக்கவும், அரசாங்கம் மற்றும் நிர்வாகத்திற்கு தகுந்த ஆதரவை வழங்க வேண்டும்” என பேசினார்.
இதையும் வாசிக்கலாமே...
அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!
அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!
உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்
ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு