பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

'பொறுக்கி கூட இப்படி பேசமாட்டான்': அண்ணாமலை திடீர் டென்ஷன்!

நாகா இன மக்களைத் தவறாக பேசிய ஆர்.எஸ்.பாரதியை திமுக அரசு காப்பாற்றப் பார்க்கிறது என்றும், சாலையில் செல்லும் பொறுக்கி கூட பேச யோசிக்கும் விஷயத்தை சர்வ சாதாரணமாக பேசிய ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக திருச்சியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’சனாதனம் குறித்து பேசியது தவறு என்று சென்னை உயர் நீதிமன்றமே சுட்டிக்காட்டும் வகையில் தான் தமிழக காவல்துறையின் நடவடிக்கை உள்ளது. நாகா இன மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேசியது தவறு. அவர் மிகவும் கீழ்தரமாக பேசிவிட்டு தற்போது அதனைத் திரித்துக் கூற திமுகவினர் முயற்சி செய்கின்றனர்.

அநாகரிகமாக பேசுவதில் சிறந்தவர் யார் என்றால் அதில் ஆர்.எஸ்.பாரதி தங்க மெடல்தான் கொடுக்க வேண்டும். நாகா இன மக்கள் தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி பேசிய பேச்சுக்கள் என்பது ரோட்டில் செல்லும் பொறுக்கி கூட பேசமாட்டான். அந்த அளவிற்கு இழிவாக பேசியுள்ளார். அவரை கைது செய்யாமல் போலீஸ் வேடிக்கை பார்க்கிறது. உடனடியாக ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட வேண்டும். அவரைக் கைது செய்ய நாகாலாந்து போலீஸ் வருவதற்கு முன்பு தமிழக போலீஸ் கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும்’’ என்றார்.

இதனிடையே ஆர்.எஸ்.பாரதி ’’ நாகா இன மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி செய்த துரோகம் குறித்துத்தான் பேசினேன் தவிர, அந்த மக்களை புண்படுத்தும் நோக்கத்தோடு பேசவில்லை’’ என விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in