‘வைகோவையே தூக்கி எறிந்தோம்’ - ஆர்.எஸ்.பாரதி காட்டம் ஏன்?

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

“எம்ஜிஆர், திமுகவை விட்டுப்போகும் போதே நாங்கள் கவலைப்படவில்லை. வைகோவையே தூக்கி எறிந்தோம். திராவிட முன்னேற்ற கழகம் தேம்ஸ் நதி போல ஓடிக்கொண்டே இருக்கும்.” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஆவடியை அடுத்த திருநின்றவூரில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பனர் பரந்தாமனின் தந்தை இந்திரனின் படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தமிழக அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சேகர்பாபு மற்றும் தயாநிதிமாறன் எம்.பி, உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். நிகழ்வின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “தருமபுர ஆதீனம் பல்லக்கு விஷயத்தில் எது நியாயமோ, சமுதாயம் ஏற்குமோ அதைத்தான் ஸ்டாலின் செய்துள்ளார்” என்றார்.

வைகோ
வைகோ

தொடர்ந்து, திமுக எம்பி-யான திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “எம்ஜிஆர் கட்சியை விட்டுப் போகும் போதே நாங்கள் கவலைப்படவில்லை. வைகோவையே தூக்கி எறிந்தோம். ஆக, யார் வந்தாலும் யார் போனாலும் கவலைப்பட மாட்டோம். இன்னும் நூறு ஆண்டு களைக் கடந்தாலும் திமுக தேம்ஸ் நதியைப் போல ஓடிக் கொண்டே இருக்கும்.” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in