அமைச்சராக பொறுப்பேற்றது முதல் இதுவரை 22 மாவட்டங்களில் கள ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின்!

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Updated on
1 min read

அரசு விடுதிகளின் உணவு உதவித்தொகை மாணவர் ஒருவருக்கு 400 ரூபாய் உயர்த்தி வழங்கிய முதல்வருக்கு அமைச்சர் உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழ்நாடு அரசின் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் மாநிலத்தின் 38 மாவட்டங்களில் 22 மாவட்டங்களுக்கு இதுவரை நேரில் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக, மாவட்டங்களில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்தோம். அந்த ஆய்வுகளின்போது, விடுதி மாணவர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் உணவு, தங்குமிடம் உள்ளிட்ட விடுதியின் வசதிகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

முதல்வர் ஸ்டாலின்- அமைச்சர் உதயநிதி
முதல்வர் ஸ்டாலின்- அமைச்சர் உதயநிதி

அவற்றை, சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்று, ஆலோசனைகளை மேற்கொண்டோம். மேலும், கள ஆய்வுதொடர்பாக விரிவான அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கினோம். அந்த அறிக்கையின் அடிப்படையில், விடுதியில் தங்கிப் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை ரூ.1000-த்திலிருந்து ரூ.1,400 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை ரூ.1100-லிருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்க மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது, அரசு விடுதிகளின் உணவு உதவித்தொகை ரூ.100 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில், நம் திராவிட மாடல் அரசு மாணவர் ஒருவருக்கு தலா ரூபாய் 400 உயர்த்தியுள்ளது. இந்த சிறப்புக்குரிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி. தமிழ்நாடெங்கும் அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ - மாணவியருக்கு என் அன்பும், வாழ்த்தும் என்று கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

மனைவியின் டார்ச்சர்… விவாகரத்து பெற்றார் ஷிகர் தவான்!

HBD சோ : எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, ரஜினி... இறுதி வரை ‘கெத்து’ காட்டிய ஆளுமை!

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை!

அதிர்ச்சி… சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தற்கொலை!

அதிகாலையில் அதிர்ச்சி... போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in