பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் - ராஜஸ்தான் தேர்தலில் பாஜகவின் வாக்குறுதி!

பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் - ராஜஸ்தான் தேர்தலில் பாஜகவின் வாக்குறுதி!

பெண்குழந்தை பிறந்தால் அக்குழந்தையின் பெயரில் ரூ.2 லட்சத்துக்கு சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்யப்படும் என்று ராஜஸ்தான் தேர்தலில் பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

ராஜஸ்தான் சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் வரும் 25- ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸும், ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.

பாஜக
பாஜக

ஜெய்ப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேர்தல் அறிக்கையை கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா இன்று வெளியிட்டார். அப்போது, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பெண்குழந்தை பிறந்தால் அக்குழந்தையின் பெயரில் ரூ.2 லட்சத்துக்கு சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்யப்படும் என்றும், சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.450-க்கு வழங்கப்படும், ஏழை மாணவர்கள் பள்ளி பாடப் புத்தகங்கள், பைகள், சீருடைகள் வாங்குவதற்காக ஆண்டுக்கு ரூ.1,200 வழங்கப்படும் என்றும் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை அதிகரித்து ஆண்டுக்கு ரூ.12,000 வழங்குதல், பொருளாதார அடிப்படையில் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிப்புத்தகம், பை உள்ளிட்டவை வாங்குவதற்காக ஆண்டுக்கு ரூ.1,200 வழங்கப்படும். ரூ.40,000 கோடியில் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி. நட்டா, ‘‘மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கை என்பது சடங்கு. பாஜகவின் தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கான பாதை’’ என்றார். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சி.பி.ஜோஷி, அர்ஜூன் ராம் மேக்வால், வசுந்தரா ராஜே சிந்தியா, கஜேந்திரசிங் ஷெகாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in