சத்தீஸ்கரில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.12,000... பாஜக அதிரடி தேர்தல் வாக்குறுதி!

சத்தீஸ்கரில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.12,000... பாஜக அதிரடி தேர்தல் வாக்குறுதி!
Updated on
1 min read

சத்தீஸ்கரில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 12,000 வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு வரும் 7 மற்றும் 17-ம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும்தான் நேரடிப் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்துக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிட்டார். ‘மோடியின் வாக்குறுதிகள்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இத்தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில், குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கப்படும். ஏழை மக்கள் இராம ஜென்ம பூமிக்கு பயணம் செய்ய ராம் லல்லா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும். நெல் குவிண்டாலுக்கு 3,100 ரூபாய் என்கிற விலையில் கொள்முதல் செய்யப்படும். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் 10,000 ரூபாய் உதவி வழங்கப்படும்.

ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் 1 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். ஏழைக் குடும்பங்களுக்கு 500 ரூபாய்க்கு சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in