இப்படியெல்லாம் சாலைப் போடுகிறார்கள்: வேலூர் ஒப்பந்ததாரர் கைதால் உஷாரான சேலம் ஒப்பந்ததாரர்!

இப்படியெல்லாம் சாலைப் போடுகிறார்கள்: வேலூர் ஒப்பந்ததாரர் கைதால் உஷாரான சேலம் ஒப்பந்ததாரர்!

சேலத்தில் கை பம்பை அகற்றாமல், புதைத்தபடி தார்ச் சாலை போடப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், அதை இரவோடு இரவாக ஒப்பந்ததாரர்கள் அகற்றி இருக்கிறார்கள்.

வேலூர் மாநகராட்சி ஸ்மார் சிட்டி திட்டத்தின்படி அமைக்கப்பட்ட சாலைகள் தொடர்ந்து சர்ச்சை கிளப்பி வருகின்றன. இருசக்கர வாகனம் மற்றும் ஜீப்பை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டுப் பரபரப்பு கிளம்பிய நிலையில், கை பம்பை அகற்றாமல் சாலை அமைத்தது சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார். இதே போன்ற சம்பவம் சேலத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் தார் சாலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேலம் மாநகராட்சி 28-வது கோட்டத்துக்குட்பட்ட அப்புசாமி தெருவில் பல ஆண்டுகளாகப் பழுதடைந்த நிலையிலிருந்த சாலையை மாநகராட்சி சார்பில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின் போது சாலை ஓரத்தில் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாமல் பழுதடைந்த நிலையிலிருந்த கை பம்பை அகற்றாமல் அதன் மீதே தார்ச் சாலையை அமைத்துள்ளனர். ஒப்பந்ததாரரின் இந்த நடவடிக்கை செவ்வாப்பேட்டை வாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வேலூர் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்ட நிலையில், சேலம் கை பம்பு விவகாரமும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியது. இதையடுத்து அந்த கை பம்பை அகற்றி கல்லைப் போட்டு மூடியிருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in