ரிது கண்டூரி: உத்தராகண்டின் முதல் பெண் பேரவைத் தலைவர்!

ரிது கண்டூரி: உத்தராகண்டின் முதல் பெண் பேரவைத் தலைவர்!

உத்தராகண்ட் சட்டமன்றப் பேரவைத் தலைவராக பாஜகவின் ரிது கண்டூரி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். உத்தராகண்டில் இந்தப் பதவியில் அமரும் முதல் பெண் எனும் பெருமையை இவர் பெறுகிறார்.

உத்தராகண்டின் 5-வது பேரவைத் தலைவராகும் ரிது கண்டூரி, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் புவன் சந்திர கண்டூரியின் மகள் ஆவார். நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக ரிது கண்டூரி பணிபுரிந்திருக்கிறார். உத்தராகண்ட் மாநில பாஜக மகளிரணித் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவரது கணவர் ராஜேஷ் பூஷண், மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

2017 சட்டப்பேரவைத் தேர்தலில் யம்கேஷ்வர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ரிது, இந்த முறை கோட்த்வார் சட்டப்பேரவைத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்திர சிங் நேகியைத் தோற்கடித்தார்.

ரிது கண்டூரியின் தலைமையில் உத்தரகாண்ட் சட்டப்பேரவை, புதிய வரலாறு படைக்கும் என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in