இங்கிலாந்தின் இந்திய வம்சாவளி அமைச்சர் திடீர் பதவி நீக்கம்

ரிஷி சுனக் - சுயெல்லா பிரேவர்மேன்
ரிஷி சுனக் - சுயெல்லா பிரேவர்மேன்

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், நாட்டின் உள்துறை அமைச்சரும் இந்திய வம்சாவளியுமான சுயெல்லா பிரேவர்மேன் என்பவரை பதவியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

பிரிட்டனின் உள்துறை அமைச்சராக இருப்பவர் சுயெல்லா பிரேவர்மேன். பாலஸ்தீன - இஸ்ரேல் விவகாரம் தொடர்பாக இவர் தெரிவித்த கருத்து காரணமாக, பதவியிலிருந்து இன்று நீக்கப்பட்டுள்ளார். சுயெல்லாவுக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்ததும், அவை ஆட்சிக்கு எதிராக மாறியதும் பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கைக்கு காரணமாகி இருக்கின்றன.

சுயெல்லா - ரிஷி
சுயெல்லா - ரிஷி

பிரதமர் ரிஷி சுனக், பிரிட்டிஷ் ஆளுகை காலத்து இந்தியாவின் வம்சாவளியாக வந்தவர். ரிஷியின் மனைவி அக்‌ஷயதா சுதந்திர இந்தியாவில் பிறந்தவர். இன்போசிஸ் இணை நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள் ஆவார். பிரதமர் ரிஷி சுனக் உட்பட பிரிட்டன் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினர் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர் சுயெல்லா பிரேவர்மேன்.

43 வயதாகும் சுயெல்லா, பாலஸ்தீன போர் விவகாரம் தொடர்பாக அண்மையில் தெரிவித்த கருத்து சர்ச்சைக்கு ஆளானது. பாலஸ்தீனம் - இஸ்ரேல் என உலகமே இரண்டுபட்டு நிற்கிறது. இருதரப்பில் தங்கள் ஆதரவு நிலைப்பாட்டுக்கு ஏற்ப பலரும் தங்கள் நாடுகளில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ரிஷி - சுயெல்லா
ரிஷி - சுயெல்லா

இந்த வகையில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் ஒன்று இங்கிலாந்தில் நடைபெற்றது. இதற்கு போலீஸார் அனுமதி அளித்தது தொடர்பாக, சுயெல்லா தெரிவித்த கருத்து அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சுயெல்லாவுக்கு எதிராக இங்கிலாந்தில் பெரும் கண்டனங்கள் எழுந்தன.

சுயெல்லாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது முடிந்தளவில் சர்ச்சையை ஆறப்போட்டு தீர்ப்பதற்கு பிரதமர் ரிஷி சுனக் முயன்றார். ஆனால், சுயெல்லாவின் கருத்து இங்கிலாந்தின் கருத்தாக சர்வதேச அளவில் சர்ச்சையை உருவாக்கவே, அவரை பதவியிலிருந்து நீக்கி பிரதமர் ரிஷி சுனக் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!

தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!

ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!

பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!

அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in