முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் பணக்கார, ஏழை வேட்பாளர் யார், சொத்து எவ்வளவு தெரியுமா?

காங்கிரஸ் எம்பி- நகுல் நாத்
காங்கிரஸ் எம்பி- நகுல் நாத்

மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்தில் பணக்கார மற்றும் ஏழ்மையான வேட்பாளர் ரூ.716 கோடி சொத்தும், ஏழை வேட்பாளர் ரூ.320 சொத்தும் கொண்டுள்ளனர்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) என்ற அமைப்பு, முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,625 வேட்பாளர்களில் 1,618 பேரின் சொத்துகளை மதிப்பாய்வு செய்துள்ளது. இதில், 10 பேர் தங்கள் சொத்து பூஜ்ஜியம் என அறிவித்துள்ளனர். முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் 450 வேட்பாளர்கள் (28 சதவீதம் பேர்) கோடீஸ்வரர்கள். இவர்கள் ரூ. 1 கோடிக்கு மேல் சொத்துகளைக் கொண்டுள்ளனர்.

ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்குமார்
ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்குமார்

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா தொகுதியின் தற்போதைய காங்கிரஸ் எம்பி-யான நகுல் நாத், ரூ.716 கோடி சொத்துகளை கொண்டுள்ளார். இவர் முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் ஆவார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஒரே வேட்பாளர் இவர் ஆவார்.

அதற்கு அடுத்த இடத்தில் ரூ.662 கோடி சொத்து மதிப்புடன் தமிழ்நாட்டின் ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அசோக் குமார் உள்ளார்.

தேவநாதன் யாதவ்
தேவநாதன் யாதவ்

தமிழ்நாட்டின் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் தேவநாதன் யாதவ் ரூ.304 கோடி சொத்துக்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். இத்தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு வெறும் ரூ.96 கோடி தான் சொத்து மதிப்பாம். அதனால் இவர் கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளார்.

சொத்து மதிப்பு பூஜ்ஜியம் என அறிவித்துள்ள 10 வேட்பாளர்களைத் தவிர, தமிழ்நாட்டின் தூத்துக்குடியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் கே.பொன்ராஜ், தனக்கு வெறும் ரூ.320 மதிப்புள்ள சொத்து மட்டுமே இருப்பதாகக் கூறியுள்ளார்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

மகாராஷ்டிராவின் ராம்டெக் தொகுதியிலும், தமிழ்நாட்டின் வட சென்னை தொகுதியிலும் சுயேட்சை வேட்பாளர்கள் முறையே கார்த்திக் கெண்ட்லாஜி டோக், சூரியமுத்து ஆகியோர் தங்களுக்கு தலா ரூ.500 மதிப்புள்ள சொத்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in